புதுடில்லி: எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு இடையே, லோக்சபாவில் நிதி மசோதா நிறைவேற்றப்பட்டது. அப்போது அவர் பேசுகையில், தேசிய பென்சன் சிஸ்டம் (என்பிஎஸ்) குறித்து ஆராய குழு அமைக்கப்படும் என்றார்.
லோக்சபாவில் எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு மத்தியில் நிதி மசோதாவை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த மசோதா குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேறியது.
அப்போது நிர்மலா சீதாராமன் பேசுகையில், என்பிஎஸ் மேம்படுத்துவது குறித்து கருத்துகள் வந்துள்ளன. பென்சஜ் குறித்த விவகாரங்களை ஆராய்வதற்காக நிதித்துறை செயலர் தலைமையில் குழு அமைக்கப்படும். இதன் மூலம் ஊழியர்களின் பிரச்னைகள் தீர்க்கப்படுவதுடன், சாமானிய மக்களை பாதிக்காத வகையில் நிதிநிலைமை சீராக்கப்படும் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement