சென்னை: என்.எல்.சி நில இழப்பீடு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. உரிய இழப்பீடு, மாற்று இடம் வழங்காததால் என்.எல்.சிக்கு நிலம் வழங்கியவர்கள் தவிப்பதாக எம்.எல்.ஏ வேல்முருகன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் தலையிட்டு பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக அழைத்து பேசி உரிய தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.