ஓபிஎஸ் உடன் சசிகலா விரைவில் சந்திப்பு: அதிமுக-வை இணைக்காமல் விடமாட்டேன் என உறுதி

எடப்பாடி பழனிசாமி உறுதி

அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக உருவெடுத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை சேர்த்துக் கொள்ளும் முடிவில் இல்லை. அவர்கள் கட்சிக்குள் மீண்டும் வந்தால் குழப்பம் அதிகரிக்கும், தனக்கான செல்வாக்கு குறைந்துவிடும் என கணக்கு போட்டிருக்கும் அவர், மீண்டும் அவர்களை இணைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். அவரது சகாக்களும் அதனையே மீண்டும் மீண்டும் கூறி வருகின்றனர். ஆனால், அதிமுக இணைப்பு என்பது சாத்தியம் என்பதில் உறுதியாக இருக்கிறார் சசிகலா.

சசிகலா மீண்டும் நம்பிக்கை 

அவர் செல்லும் இடமெல்லாம் அதிமுக மீண்டும் ஒன்றிணையும் என கூறி வரும் அவர், அதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். திருவாரூரில் சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவகுமாரின் மகனுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் சசிகலா, இளவரசி, திவாகரன் மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக இணைப்பு குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.  

அதிமுக இணைப்பு தேதி

அதிமுகவின் தோல்விக்கு அனைவரும் பிரிந்திருப்பது தான் காரணம். அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்குள் அனைவரும் ஒன்றிணைவோம். அதிமுகவின் பிரிவு திமுகவுக்கு வெற்றியை கொடுக்க நான் நிச்சயம் விடமாட்டேன். எல்லோரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திப்போம். அனைவரையும் ஒன்றிணைக்க நான் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன். இந்த இணைப்புப் பிறகு அனைவரும் சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து வெற்றி பெறுவோம். விரைவில் ஓ.பன்னீர்செல்வம் வந்து என்னை சந்திப்பார். எங்கள் கட்சிக்காரர்களிடையே நாங்கள் வித்தியாசம் பார்ப்பது இல்லை என அப்போது சசிகலா தெரிவித்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.