தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கட்டமடுவு நான்கு மாத குட்டி யானை ஒன்று கிணற்றில் தவறி விழுந்துள்ளது. சுமார் 30 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் குட்டி யானை விழுந்த நிலையில் அதை வனத்துறையினர் போராடி மீட்டனர்.
5 நாட்களாக அதனை யானை குட்டியின் குடும்பத்துடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக போராடி வந்தனர். ஆனால் அந்த யானை குட்டியை அதன் குடும்பத்தினர் சேர்த்துக் கொண்ட பாடில்லை.
The Circle of life continues #TheElephantsWhisperers Bomman & Bellie are now foster parents to another orphaned baby elephant from Dharmapuri,now in #Mudumalai after Team #TNForest tried its best to reunite the 4 months old calf with herd. We are happy he is in safe hands. vc-ss pic.twitter.com/YVbG7bzGJh
— Supriya Sahu IAS (@supriyasahuias) March 24, 2023
இதையடுத்து சமீபத்தில் ஆஸ்கர் விருது வாங்கிய பொம்மன், பெள்ளி தம்பதியிடம் இந்த யானையை விட வனத்துறை முடிவு செய்து அனுப்பி வைத்தது. அதன்படி, பொம்மன் பெள்ளி தம்பதியிடம் வளர்ந்து வரும் அந்த யானை குட்டியின் சமீபத்திய வீடீயோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதனை வனத்துறை செயலர் சுப்ரியா சாகு டுவிட்டர் தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடீயோவில், குட்டி யானை ஆஸ்கர் தம்பதியுடன் அழகாக கொஞ்சி விளையாடுகிறது. இது காண்போனை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.