வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : நாடு முழுதும் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து, தனி மனித இடைவெளி அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து, சிறைகளில் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்ட அதிகாரிகளின் பரிந்துரையில், சாதாரண குற்றங்களில் கைது செய்யப்பட்டவர்கள், ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரும், 15 நாட்களுக்குள் சரணடைய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி.ரவிகுமார் தலைமையிலான அமர்வு, இது குறித்த அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:பெருந்தொற்று காலத்தில் அவசர ஜாமினில் விடுவிக்கப்பட்ட விசாரணைக் கைதிகள், சரணடைந்த பின் தகுதிவாய்ந்த நீதிமன்றங்களில் வழக்கமான ஜாமின் பெறலாம்.இதேபோல் விடுவிக்கப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் தங்களின் தண்டனையை இடைநிறுத்துவதற்கு தகுதியான நீதிமன்றங்களை நாடலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement