காங்கிரஸ் கட்சியின் சின்னமான கை சின்னத்தில் கூட 5 விரல்கள் இருக்கின்றன என்றும் ஆனால் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அழகிரியின் பின்னால் 3 பேர் மட்டுமே நின்றுகொண்டு ரயில் வராத தண்டவாளத்தில் மறியல் போராட்டம் நடத்துகின்றனர் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார்.
பா.ஜ.க ஜனநாயக உரிமைகளை நசுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது என்ற முதலமைச்சரின் விமர்சனம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அண்ணாமலை, சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டவர்கள் மீது அதிகளவு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டதில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் இருக்கும் என தாம் கருதுவதாகக் கூறினார்.