புதுடெல்லி: கொரோனா காலத்தில் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த கைதிகள் 15 நாட்களுக்குள் சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின் படி, 15 நாட்களுக்குள் கொரோனா காலத்தில் பரோல் / ஜாமீனில் வெளியே சென்றோர் சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகளிடம் சரணடைய வேண்டும் எனவும், இதனை மாநில நீதிமன்றங்கள், சிறை அதிகாரிகள் அமல்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அவர்கள் சரணடைந்த பிறகு, வழக்கம் போல அவர்கள் ஜாமீன் கோரலாம் எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.