கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை (25) 10 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
நாளை (25) மு.ப. 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கொழும்பு, தெஹிவளை – கல்கிஸ்சை, கோட்டை, கடுவெல ஆகிய மாநகர சபைகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ ஆகிய நகர சபைகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள், கொட்டிகாவத்தை – முல்லேரியா ஆகிய பிரதேச சபைகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள், இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பிரதேசங்களிலும் நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.