தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் பட்டியலில் உள்ள இளம் நாயகி ப்ரியா பவானி சங்கர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து பிரபலமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர். ப்ரியா பவானி சங்கர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து பேசியுள்ளார்.
எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
தமிழ் சினிமாவில் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக திகழும் இவர் நடிப்பில் கடந்தாண்டு யானை, குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்கள் ரிலீசானது. இதில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படம் 100 கோடி வரை வசூல் செய்திருந்தது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அண்மையில் ஜெயம் ரவியுடன் இவர் இணைந்து நடித்த ‘அகிலன்’ படம் வெளியானது. மேலும் இவர் கைவசம் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளன. பிரியா பவானி சங்கர் நடிப்பில் தற்போது பொம்மை, ருத்ரன், இந்தியன் 2, பத்து தல உள்ளிட்ட படங்கள் உள்ளன. இவர் சோஷியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக உள்ளார்.
Bombay Jayashri: தலையில் பலத்த அடி.. லண்டன் மருத்துவமனையில் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ..!
இந்நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய பிரியா பவானி சங்கரிடம் சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், நான் தொலைக்காட்சியில் பணியாற்ற துவங்கியதில் இருந்து தற்போது வரை என்னிடம் யாரும் தவறாக நடக்க முயற்சி செய்ததில்லை. எனக்கு பல நண்பர்கள் இருந்தாலும் அந்த மாதிரி யாரும் நடந்து கொண்டதில்லை.
ஆனால், சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் இருக்கிறது. நான் இல்லை என்று சொல்லவில்லை என்று ப்ரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார். பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘பத்து தல’ படம் வரும் 30 ஆம் தேதி ரிலிஸ் ஆக இருக்கிறது. சிம்பு, கெளதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Leo: தளபதியோட அந்த ஸ்டைலு.. தீயாய் இருக்கே: ‘லியோ’ படத்தின் வெறித்தனமான வீடியோ.!