மதுரை மாவட்டத்தின் முதன்மை நீதிபதியாக பதவி வகித்து வருபவர் பி.வடமலை. இவரை, சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமனம் செய்ய ஏற்கனவே உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
அந்த பரிந்துரையின் படி, சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பி.வடமலையை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ஆந்திரா உயர்நீதிமன்றத்தின் நீதிபதி பட்டு தேவ் ஆனந்த் மற்றும் தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி தேவராஜூ நாகார்ஜூன் உள்ளிட்டோரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்ய கொலீஜியம் பரிந்துரை செய்தது.
அந்த பரிந்துரையின் படி, இவர்கள் இருவரையும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், மூன்று நீதிபதிகளும் விரைவில் உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு ஏற்பார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.