சென்னை மாநகராட்சியில் சொத்து வரி, தொழில் வரி செலுத்த கடைசி நாள் மார்ச் 31ம் தேதி என்று கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இந்த காலத்திற்குள் சொத்து வரி, தொழில் வரி செலுத்த தவறினால் 2% அபராதம் விதிக்கப்படும் என்றும், நீண்ட நாட்களாக செலுத்தாத இடங்களுக்கு சீல் வைக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் சுமார் 9 லட்சம் ரூபாய் சொத்துவரி பாக்கி வைத்திருந்த பிரபல அடுக்குமாடி கட்டிடத்திற்கு சீல் வைத்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கிடையே, சொத்து வரி, தொழில் வரி செலுத்த கடைசி நாள் மார்ச் 31ம் தேதி என்று கால நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பது நியாயமற்றது என்றும், கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்றும் பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கால அவகாசம் முடியும் முன்பே சீல் வைத்து நடவடிக்கை எடுப்பது அநியாயமான செயல் சென்றும் சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.