தாலிபான் அமைச்சரவை கூட்டத்தில் சண்டை! அமைச்சரின் கையை உடைத்த தேர்வு வாரிய தலைவர்!

ஆப்கானிஸ்தானில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், தேர்வுத் தாள்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உள்ளூர் பத்திரிகையாளர் பிலால் சர்வாரி, தலிபான் அமைச்சரவைக் கூட்டங்களில் கைகலப்புகள் அன்றாட நிகழ்வாகிவிட்டதாக ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார். பிலால் சர்வாரி தனது ட்வீட்டில், “தாலிபானின் MoHE ஷேக் நெய்டா மற்றும்  தேர்வு வாரியத் தலைவர் ஷேக் பாக்கி ஹக்கானி ஆகியோர் வாரியத் தேர்வுத் தாள்களுக்கு மதிப்பெண் அளிப்பது தொடர்பாக சர்ச்சையில் ஈடுபட்டனர். ஷேக் பாக்கி ஹக்கானியிடம் புகார் செய்த நிலையில், சண்டை முற்றி ஷேக் நெடாவின் கை உடையும் நிலை ஏற்பட்டது” என பதிவிட்டுள்ளார்.

 தாலிபான் ஆட்சி

அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக தலிபான்கள் 2001 ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான கூட்டணியால் வெளியேற்றப்பட்டனர். இருப்பினும், ஆகஸ்ட் 2021 இல் தலிபான்கள் மீண்டும் நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்ற முடிந்தது. தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

ஜோ பிடனின் முக்கிய அறிக்கை

இதற்கிடையில், ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானில் வன்முறையை எதிர்கொள்ளும் பெண்களுக்கு வாஷிங்டன் துணை நிற்கிறது என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானை சேர்ந்த டோலோ நியூஸ் இந்த தகவலை தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகை உரையில் பிடென், ‘ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானில் வன்முறையை எதிர்கொள்ளும் பெண்களுக்கு ஆதரவாக நாங்கள் நிற்கிறோம். இரண்டு வாரங்களுக்கு முன்பு நான் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தில் மூன்று பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகளவில் பெண்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் என கூறினார்.

மேலும் படிக்க | அதிகரிக்கும் நெருக்கடி… குறைந்தபட்ச கடனாவது தாங்க… கையேந்தும் பாகிஸ்தான்!

பெண்கள் உரிமை மீறல்

முன்னதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை துணைச் செயலர் கே வெண்டி ஆர் ஷெர்மன், காபூலில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான அடிப்படை உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். “ஆப்கானிஸ்தான் மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்திற்கான தங்கள் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கு பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களின் அடிப்படை மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களைப் பயன்படுத்த அனுமதிக்குமாறு நாங்கள் தலிபான்களுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க | தன் வினை தன்னை சுடும்…. பாகிஸ்தானை விழுங்க ஆரம்பிக்கும் பயங்கரவாத அரக்கன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.