நடிகர் அஜித்குமார் தந்தை சுப்பிரமணியம் காலமானார்
சென்னை: திரைப்பட நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் (86) வயது மூப்பு காரணமாக காலமானார். சமீபத்தில் அவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஈசிஆர் ரோட்டில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது. பெசன்ட்நகர் மயானத்தில் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது. ரசிகர்கள் கூட்டம் வந்தால் கட்டுப்படுத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.