நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டுபிடித்த புதிய கிரகம்..!

நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி சூரியக் குடும்பத்துக்கு வெளியே உள்ள ஒரு தொலைதூரக் கோளின் வளிமண்டலத்தில் சிலிக்கேட் மேக அம்சங்களைக் கண்டறிந்துள்ளது.

VHS 1256 b என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகம் பூமியிலிருந்து 40 ஒளியாண்டுகள் தொலைவிலும், அதனை சுற்றிவரும் நட்சத்திரத்திற்கும் இடையே உள்ள தொலைவானது, சூரியனில் இருந்து புளூட்டோ கிரகம் உள்ள தொலைவை விட 4 மடங்காகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கிரகத்தில் மீத்தேன், கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றுடன், தண்ணீரும் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக நாசா தெரிவித்து உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.