நாட்றம்பள்ளி : நாட்றம்பள்ளி தாலுகாவில் குறவர் இன மக்களுக்கு ஜாதி சான்று வழங்க வேண்டும் என தாசில்தாரிடம் மனு அளித்தனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் வாழும் குறவர் இன மக்கள் பல ஆண்டுகளாக ஜாதி சான்று இல்லாமல் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் இந்து குறவன் சாதி சான்று வழங்க கோரி நேற்று 30க்கும் மேற்பட்டோர் தமிழ் பழங்குடியின குறவன் சங்கம் மாநிலத் தலைவர் ரமேஷ், மாநில பொதுச் செயலாளர் ரவி ஆகியோருடன் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.