டெல்லி: நான் இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். பிரதமரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுலுக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நடவடிக்கை மேற்கொண்டது. மார்ச் 23-ம் தேதி முதல் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலர் உத்பால் குமார் சிங் அறிவித்துள்ளார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சட்ட நிபுணர்களுடன் காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காங். முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; நான் இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன்; அதற்காக நான் எந்த விலையையும் தர தயாராக உள்ளேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.