ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
கடந்த 2019ல் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி இருந்தபோது, கர்நாடகா மாநிலம் கோலாரில் அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி சாதி பெயர் குறித்து பேசியது பாஜக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனை எதிர்த்து குஜராத் முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இதனை இன்று விசாரித்த சூரத் மாவட்ட நீதிபதி வர்மா, ராகுல் காந்தி குற்றவாளி தீர்ப்பளித்தார்.
இதனை தொடர்ந்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுல் காந்திக்கு உடனடி பிணையும் வழங்கப்பட்டு உள்ளது.
இதனையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் ராகுல்காந்திக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில், ராகுல் ஜி இந்த நேரத்தில் நான் உங்களுடன் இருக்கிறேன், சோதனையான நேரங்களையும், நியாமற்ற தருணங்களையும் நீங்கள் அதிகளவில் சந்தித்துள்ளீர்கள்.
நீதி வழங்குவதில் உள்ள தவறுகளை சரிசெய்யும் அளவுக்கு நம் நாட்டு நீதித்துறையும் வலுவாக இருப்பதாக நம்புகிறேன்.
மேல்முறையீட்டில் உங்கள் ஆதரவான தீர்ப்பே கிடைக்கும், சத்யமேவ என தெரிவித்துள்ளார்.
Rahulji, I stand by you during these times! You have seen more testing times and unfair moments. Our Judicial system is robust enough to correct aberrations in dispensation of Justice. We are sure, you will get your justice on your appeal of the Surat Court’s decision! Satyameva…
— Kamal Haasan (@ikamalhaasan) March 23, 2023