பல ஆண்டுகளாக கூண்டில் இருந்த கிளி, அதனை விட்டு வெளியே பறக்க தயாராகி விட்டதாக குறிப்பிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மாநிலத்தில் களம் மாறிவிட்டதாகவும், அரசியல் புரட்சிக்கான நேரம் வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, பாலும், தண்ணீரும் சேராது என்பது போல், தமிழகத்தில் பாஜகவின் பாதை தனிப்பாதையாகவும், சிங்கப்பாதையாகவும் இருக்க வேண்டும் என கூறினார்.
பின்னர் பேட்டியளித்த அவர், அனைவருக்கும் ஒரே நீதி என்ற அடிப்படையில் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
ராகுல் நிச்சயம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும், அவர் பேச பேச தான் பாஜக வளரும் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார்.