லாகூர்: பாகிஸ்தானில் பஞ்சாப் மற்றும் கைபர், பக்துங்க்வா மாகாணங்களில் ஆட்சி நடத்தி வந்த இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தேர்தலை முன்கூட்டியே நடத்தும் நோக்கத்தில் கடந்த ஜனவரியில் ஆட்சியை கலைத்தது. இதனால், அங்கு வரும் ஏப்ரல் 30ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அந்நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போதைய சட்டம்-ஒழுங்கு, அரசியல் சூழல், பாதுகாப்பு அச்சுறுத்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தேர்தலை 5 மாதம் ஒத்திவைத்து, வரும் அக்டோபர் 8ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.