தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் பிரபல பிண்ணனி இசை பாடகியாக வலம் வருபவர் பாம்பே ஜெயஸ்ரீ. மேலும், கர்நாடக இசை மட்டுமின்றி, சினிமா பாடல்கள் மட்டுமின்றி, இந்துஸ்தானி இசை உட்பட எல்லா ஜானர்களிலும் பாடக்கூடியவர்.
குறிப்பாக தமிழில் `சுட்டும் விழிச் சுடரே’, `வசீகரா’, `பார்த்த முதல் நாளே’, `முதல் கனவே’ உள்ளிட்ட பல பாடல்கள் ஹிட் பாடல்களைப் பாடியிருக்கிறார்.
தற்போது இசைக் கச்சேரிக்காக லண்டனுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த வருடத்தின் ‘சங்கீத கலாநிதி’ விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் லண்டன் சுற்றுப்பயணத்தில் இருக்கும் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.