பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ உடல்நலக்குறைவு காரணமாக லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஏராளமான மெல்லிசை பாடல்களை பாடியுள்ள அவர், பத்மஸ்ரீ விருதையும் வென்றுள்ளார்.
இசை கச்சேரியில் பங்கேற்க லண்டன் சென்றிருந்த நிலையில், அங்கு அவருக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.