பிரபல ஐ.டி.தனியார் நிறுவனத்தில் ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்?

வாஷிங்டன்,

ஐடி சேவை துறையில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் மத்தியில் அக்சென்சர் முதல் நிறுவனமாக தனது வருவாய் கணிப்பை வெளியிட்டது மட்டும் அல்லாமல் செலவுகளை குறைக்க 19000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொருளாதார மந்தநிலை அதாவது ரெசிஷன் அச்சம் மற்றும் டெக் சேவைகள் மீதான செலவின குறைப்புகள் குறித்த எச்சரிக்கை கணிப்புகள் மூலம் அக்சென்சர் நிறுவனம் வியாழன் அன்று அதன் வருடாந்திர வருவாய் வளர்ச்சி மற்றும் இலாப கணிப்புகளை குறைத்துள்ளது.

அமெரிக்காவில் ஒரு பக்கம் வங்கிகளின் நிதி நிலை மோசமாகி வருகிறது. மறுப்புறம் பெரிய டெக் நிறுவனகங்களின் 2வது ரவுண்ட் பணிநீக்கம், இதற்கிடையில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அமெரிக்க பெடரல் வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. தற்போது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வங்கிகளின் திவால் காரணமாக ஐடி நிறுவனங்களின் வர்த்தகம் வருமானம் பாதிக்கும் என்பது தான் முக்கிய பிரச்சினையாக உள்ளது.

இந்தநிலயில், ஆக்சென்ச்சர் என்ற ஐ.டி.நிறுவனத்தில் 19,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிறுவனத்தில் உள்ள 40% ஊழியர்கள் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்சென்ச்சரில் நடந்து வரும் பணிநீக்கங்கள் பல ஊழியர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது. பணிநீக்கங்களுக்கான சரியான காரணம் குறித்து அதிகாரப்பூர்வமாக ஏதும் வெளியிடப்படவில்லை


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.