கடந்த வியாழன் அன்று பிரான்ஸ் முழுவதும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தெருக்களில் இறங்கி போராடியதால் வன்முறை அதிகரித்துள்ளது.
ஓய்வூதியத்திற்கு சட்டத்திற்கு எதிர்ப்பு
பிரான்ஸ் நாட்டில் ஓய்வூதிய சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக கடந்த 10 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது.
@reuters
இப்போராட்டத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சாலையில் இறங்கி போராடியுள்ளனர். ஓய்வூதியத்திற்கு எதிராக குரல் எழுப்பிய மக்கள் சாலைகளில் பதாகைகளோடு கூச்சலிட்டுக் கொண்டு சென்றுள்ளனர்.
@reuters
தொழிலாளர்கள் தேசிய வேலைநிறுத்தத்தை நடத்தியதை அடுத்து, பாரிஸ் மற்றும் பிராந்திய தலைநகரங்களில் போராட்டக்காரர்களுக்கும்,
காவல்துறையினருக்கும் இடையே மோதல்கள் வெடித்தன.
வன்முறையாக மாறிய போராட்டம்
சுமார் 1,000 பேர் வன்முறையாக செயல்பட்டதாக பிரெஞ்சு காவல்துறை கூறியுள்ளது. மேலும் தீ வைத்தது, புகை குண்டுகளை வீசியது மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.
@reuters
தென்மேற்கு நகரமான போர்டோக்ஸில், CNN துணை நிறுவனமான BFMTV படி, பொலிஸிடம் நடந்து கொண்டிருக்கும் மோதல்களின் போது போராட்டக்காரர்கள் நகர மண்டபத்தின் நுழைவாயிலுக்கு தீ வைத்துள்ளனர்.
”நாடு தழுவிய போராட்டத்தின் போது வியாழக்கிழமை மட்டும் பிரான்சில் குறைந்தது 80 பேர் கைது செய்யப்பட்டனர் மற்றும் 123 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர்” என்று பிரெஞ்சு உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் தெரிவித்துள்ளார்.
@reuters
பிரிட்டனின் மன்னர் சார்லஸ், மன்னராக தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தின் போது பிரான்ஸுக்கு வரவிருக்கும் நிலையில் தொழிற்சங்கங்கள் புதிய வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புகளை அமைத்துள்ளன.