பிரித்தானியாவில் காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்த நபர்: 90 சதவீதம் எரிந்த உடலோடு 2 வருடம் வாழ்ந்த பெண்


பிரித்தானியாவில் காதலனால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டு பின் 90 சதவீதம் எரிந்த உடலோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  பெண் உயிரிழந்துள்ளார்.

மோசமான வன்முறை

பிரித்தானியாவில் வாழும் லேக் பேட்மன்(Leigh Pateman) என்ற நபரும் எலென் மார்ச்சல் (Ellen Marshal) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் ஒரு நாள் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபமடைந்த பேட்மன் தன் வீட்டிலிருந்த பெட்ரோலை எடுத்து காதலியின் உடல் முழுதும் ஊற்றி அவளைத் தீயிட்டுள்ளார். அந்த பெண் எரிந்த உடலோடு கத்தும் போது கூட பேட்மன் உதவவில்லை.

பின் புகை மற்றும் மோசமான துர்நாற்றத்தை வைத்து பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் தீயணைப்பு படையினரை அழைத்துள்ளனர். அவர்கள் அந்த பெண்ணை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பிரித்தானியாவில் காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்த நபர்: 90 சதவீதம் எரிந்த உடலோடு 2 வருடம் வாழ்ந்த பெண் | Woman Dies 2 Years Boyfriend Domestic Violence@pa

பேட்மன் தீயணைப்பு படையினர் வருவதற்கு முன் இரண்டு வாளி தண்ணீரை எடுத்து  மார்ச்சல் மீது ஊற்றி விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

உயிருக்கு போராடிய மார்ச்சல்

கடந்த ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு மார்ச்சல் எரிந்த உடலோடு மருத்துவமனையில் அனுமதிக்கும் போது அவரது தலைமுடி, முகம், கண்கள் கூட எரிந்த நிலையில் இருந்திருக்கிறது. பின்னர் 12 மணி நேர அறுவை சிகிச்சையில் மார்ச்சலை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

பிரித்தானியாவில் காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்த நபர்: 90 சதவீதம் எரிந்த உடலோடு 2 வருடம் வாழ்ந்த பெண் | Woman Dies 2 Years Boyfriend Domestic Violence@google

மேலும் மார்ச்சல் வாழ 50 சதவிகித வாய்ப்புகள் தான் இருந்ததாகவும், அவருக்கு குழாய்கள் மூலமே உணவு அளிக்கும் நிலையில் இருந்தார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கை விரல்கள் கூட எரிந்த நிலையில் மார்ச்சலின் மேல் உடல் கிட்டதட்ட 90 சதவிதம் எரிந்து விட்டது. முகம் முழுவதும் சிதைந்ததில் அடையாளமே காண முடியாத நிலையிலிருந்திருக்கிறார்.

பிரித்தானியாவில் காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்த நபர்: 90 சதவீதம் எரிந்த உடலோடு 2 வருடம் வாழ்ந்த பெண் | Woman Dies 2 Years Boyfriend Domestic Violence@swns

இந்தநிலையில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு மார்ச்சல் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். சம்பவம் நடந்த அன்றே கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த  பேட்மனை நீதி மன்றம் விசாரித்தது.

சிறை தண்டனை

தற்போதும் கூட அந்த விபத்து எதேச்சையாகத் தான் நடந்தது என கூறி பேட்மன் சமாளித்துள்ளார்.

இந்த வழக்கு மிகவும் மோசமான வழக்கென காவல்துறை தெரிவித்துள்ளது.

இவ்வளவு கொடுமையான வன்முறை செயலை நாங்கள் கண்டதேயில்லை எனக் கூறியுள்ளது.

இதனை தொடர்ந்து பேட்மனுக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.    



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.