பெண்களுக்கு தனி பட்ஜெட் என்பது பூர்வாங்க பணியில் உள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசிய பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவையில் உள்ள சாலைகள் பழுதடைந்துள்ளதாகவும் அதை மேம்படுத்தி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சாலைகளை மேம்படுத்த 200 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, முதல் கட்டமாக 90 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பெண்களுக்கென்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும், 100% பெண்களை மையப்படுத்திய அது இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதற்குப் பதில் அளித்து பேசிய கீதா ஜீவன், பாலின பட்ஜெட் குறித்து துறை ரீதியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பெண்களுக்கான பட்ஜெட் பூர்வாங்க நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM