எழுத்தாளர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல் அதே பெயரில் படமாக உருவானது. தமிழ் சினிமாவில் பலர் இதனை செய்ய நினைத்தாலும், இயக்குனர் மணிரத்னம் தான் அந்த கனவை நிறைவேற்றினார். கடந்த ஆண்டு வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது ‘பொன்னியின் செல்வன்’ படம். முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகத்திற்கான ரிலீஸ் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
புத்தக வாசகர்களின் பிரியமான நூலான ‘பொன்னியின் செல்வன்’ படமாக உருவானது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் இந்தப்படத்தை இயக்கினார். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் இந்தப்படம் வெளியானது. பிரம்மாண்டமாக வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்தப்படத்தில் ஜெயம் ரவி பொன்னியின் செல்வனாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும், விக்ரம் ஆதித்ய கரிகாலனாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும்,, திரிஷா குந்தைவையாகவும் நடித்தனர். மல்டி ஸ்டார் படமாக வெளியான இந்தப்படத்தில் இவர்களுடன் பிரபு, சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, கிஷோர், லால், பாபு ஆண்டனி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களே நடித்தனர்.
‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பின் போதே இரண்டாம் பாகத்திற்கான பல காட்சிகள் படமாக்கப்பட்டது. மணிரத்னமின் மெட்ராஸ் டாக்கீஸ், லைகா நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் இந்தப்படத்தை உருவாக்கினர். முதல் பாகத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் பாகத்தினை விரைவில் ரிலீஸ் செய்வதற்கான வேலைகளை படக்குழுவினர் செய்து வருகினறனர்.
சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட்: பிரியா பவானி சங்கர் கூறிய அதிர வைக்கும் தகவல்.!
கடந்த 20 ஆம் தேதி இந்தப்படத்தின் முதல் சிங்கிளாக ‘அக நக’ என்ற பாடல் வெளியானது. இளங்கோ கிருஷ்ணன் எழுதிய இந்தப்பாடலுக்காக படக்குழு வெளியிட்ட போஸ்டரில் குந்தவையான திரிஷா முன்பு வந்தியத்தேவன் கார்த்தி மண்டி போட்டிருப்பதை போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த போஸ்டர் சோஷியல் மீடியாவில் வைரலானது.
Bombay Jayashri: தலையில் பலத்த அடி.. லண்டன் மருத்துவமனையில் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ..!
இந்நிலையில் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் டிரெய்லர் வரும் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர். தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக திகழும் ‘பொன்னியின் செல்வன் ‘ இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.