மதுரை: மதுரையில் உள்ள எக்கோ பார்க், ராஜாஜி பூங்காவின் நிலை குறித்து ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் நிலை அறிக்கை தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பூங்காவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி முறையாக பராமரிக்கக் கோரி மதுரையை சேர்ந்த பொழிலன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.