மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை


கிழக்கு லண்டனில் இல்ஃபோர்ட் பகுதியில் காப்பகம் ஒன்றில் இருந்து பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்ட தமிழர் ஒருவர் திடீரென்று தப்பிய நிலையில், பொதுமக்களுக்கு பொலிசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்

கிழக்கு லண்டனில் காப்பகம் ஒன்றில் இருந்து பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் 35 வயதான பாலசங்கர் நாராயணன் தப்பியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை | Not Approach Violent Fugitive Wanted Police

Image: Humberside Police

மேலும், அவர் தப்பிக்கும் போது நீல நிற டிராக்சூட்டில் இருந்தார் எனவும், ஆபத்தானவர் எனவும் எவரும் அவர் அருகாமையில் நெருங்க வேண்டாம் எனவும் மாநகர பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் எவரேனும் அவரை அடையாளம் காண நேர்ந்தால், அவரை நெருங்காமல் 999 இலக்கத்திற்கு தகவல் தெரிவிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மட்டுமின்றி, பாலசங்கர் நாராயணனுக்கு லண்டன் முழுவதும் தொடர்புகள் இருப்பதாகவும்,

குறிப்பாக நியூஹாம், கிரீன்ஃபோர்ட், ஹேமர்ஸ்மித், ஹைகேட் மற்றும் இல்ஃபோர்ட் பகுதிகளில் அவருக்கு அடைக்கலம் வழங்கப்படலாம் எனவும், நாட்டில் எங்கு வேண்டுமானாலும் அவர் மறைவாக இருக்கலாம் எனவும் பொலிசார் எச்சரித்துள்ளனர்.

பொலிசார் தீவிர நடவடிக்கை

பொலிசார் தெரிவிக்கையில், மார்ச் 20ம் திகதி, திங்கள் அன்று Ilford இல் உள்ள ஒரு காப்பகத்தில் இருந்து ஊழியர்களுடன் பாதுகாப்பாக வெளியே சென்ற நிலையில் பாலசங்கர் நாராயணன் தலைமறைவானார்.

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை | Not Approach Violent Fugitive Wanted Police

Image: met police

இந்த நிலையில், அவரது இருப்பிடத்தை கண்டறிய பொலிசார் தீவிர நடவடிக்கை முன்னெடுத்து வருவாதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், பாலசங்கர் நாராயணன் தற்போது ரயில் சேவையை பயன்படுத்தி தப்பிக்க முயற்சி மேற்கொள்ளலாம் எனவும்,

ஊழியர்கள் மற்றும் பயணிகள் அவரை அடையாளம் காண நேரிட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.