மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது நீதிமன்ற தீர்ப்பின் தாக்கம் என்பதால் அந்த தீர்ப்பை எதிர்த்து தடை பெறுவதுதான் சரியானதாக இருக்கும் என சட்ட வல்லுனர்கள் கருதுகின்றனர்.
அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பளித்து அவருக்கு இரண்டு வருட சிறை தண்டனை வழங்கியது சூரத் நகரில் உள்ள சீஃப் ஜூடிசியல் (CJM) மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம். ஆகவே இந்த தீர்ப்புக்கு எதிராக அவர் குஜராத் மாநிலத்தில் சூரத் பகுதியில் உள்ள செஷன்ன்ஸ் நீதிமன்றத்தை அணுகி மேல்முறையீடு தாக்கல் செய்து, தான் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள தீர்ப்பு மற்றும் தனக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை இரண்டுக்கும் தடை கூறலாம்.
செஷன்ன்ஸ் நீதிமன்றத்தில் தடை கிடைக்காவிட்டால் ராகுல் காந்தி குஜராத் உயர் நீதிமன்றத்தை நாடலாம். உயர்நீதிமன்றத்திலும் சாதகமான தீர்ப்பு கிட்டாவிட்டால், ராகுல் காந்தி அதன்பிறகு உச்ச நீதிமன்றத்தை நாடலாம். ராகுல் காந்தி நேரடியாக உச்ச நீதிமன்றத்தை நாட வாய்ப்புள்ளது என்றாலும், காங்கிரஸ் கட்சியின் மூத்த வழக்கறிஞர்கள் நேரடியாக உச்ச நீதிமன்றத்திற்கு செல்வது சரியாக இருக்காது என கருதுகின்றனர்.
மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து ராகுல் காந்தி தனியாக மனுத் தாக்கல் செய்வது சரியாக இருக்காது எனவும் சட்ட வல்லுனர்கள் கருதுகின்றனர். சூரத் சீஃப் ஜூடிசியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்ற தீர்ப்பின் காரணமாகவே, ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி பறிபோனது என்பதால், அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதே சரியாக இருக்கும் என்பது அவர்களது கருத்து. மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது நீதிமன்ற தீர்ப்பின் தாக்கம் என்பதால் அந்த தீர்ப்பை எதிர்த்து தடை பெறுவது சரியாக இருக்கும் என சட்ட வல்லுனர்கள் கருதுகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM