ராகுல் காந்தியின் பதவி நீக்கம் சரியா.? – மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் சொல்வது என்ன.?

ராகுல் காந்தி பதவி பறிப்பு

மோடி என்ற பெயரை வைத்தவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கின்றனர் என ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார். அதைத் தொடர்ந்து ஓபிசி சமூக மக்களின் குடும்ப பெயரை இழிவுபடுத்தியதாக கூறி, குஜராத் முன்னாள் அமைச்சர் புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்தநிலையில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தநிலையில், நேற்று ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து அவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்வதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. ராகுல் காந்திக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன.

சட்டம்

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 8(3) படி, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எந்தக் குற்றத்திற்காகவும் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டால், அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்ற விதி உள்ளது. அதன்படி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951(Representation of the People Act) பிரிவு 8-இன் கீழ், பதவியில் இருக்கும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர், சட்டமேலவை உறுப்பினர் ஆகியோர் மீது கிரிமினல் வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து, 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்துக்கு தண்டிக்கப்பட்டால் அவர்களின் பதவி தகுதிநீக்கம் செய்யப்படும். பிரிவு 8-இன் கீழ் தகுதிநீக்கம் செய்யப்படும் நபர்கள், தண்டனைக் காலம் நீங்கலாக 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடதக்கது.

அதேபோல் பிரிவு 9இன் கீழ், ஊழல், அரசாங்க ஒப்பந்தங்களில் தலையிடுவது போன்ற காரணங்களுக்காக தகுதிநீக்கம் செய்யப்படுகிறது. தேர்தல் செலவுக் கணக்கைத் தாக்கல் செய்யத் தவறினால் பிரிவு 10ன் கீழ் தகுதி நீக்கம் செய்யலாம். ஊழல் நடைமுறைகளுக்கான பிரிவு 11ன் கீழ் தகுதி நீக்கம் செய்யப்படுகிறது.

எம்பி தகுதி நீக்கம் செய்யப்படும் முறைகள்

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி எம்பி மற்றும் எம்எல்ஏ-க்களின் பதவி பொதுவாக மூன்று முறைகளில் பறிக்கப்படும். பதவியில் உள்ள ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளில் இருப்பது, மனநிலை சரியில்லாமல் இருப்பது, இந்திய குடியுரிமை இல்லாமல் இருப்பது போன்ற ஏதேனும் ஒரு காரணத்திற்காக தகுதிநீக்கம் செய்யப்படுவார்.

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா; மீண்டும் கட்டுப்பாடுகள்? பிரதமர் மோடி ஆலோசனை!!!!

அதேபோல் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் மூலம், பிற கட்சிகளுக்கு மாறும் மக்கள் பிரதிநிதிகள் மீது தகுதிநீக்கம் கொண்டு வரப்படுகிறது. அதேபோல் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மூலமாக தகுதி நீக்கம் செய்யப்படுவது ஆகிய மூன்று முறைகளில் தகுதி நீக்கம் செய்யப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.