லண்டனில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்… தாயாரும் இரண்டு பிள்ளைகளும்: வெளிவரும் பகீர் பின்னணி


தென்கிழக்கு லண்டனில் உள்ள Belvedere பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில், கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் இரு சிறுவர்களும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளப்பட்ட நிலையில் தாயாரும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரு சிறுவர்களும் சடலமாக

Belvedere பகுதியில் குடியிருக்கும் 47 வயதான Nadja De Jager என்பவரே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவருடன் அலெக்சாண்டர்(9), மற்றும் மாக்சிமஸ்(7), ஆகிய இரு சிறுவர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

லண்டனில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்... தாயாரும் இரண்டு பிள்ளைகளும்: வெளிவரும் பகீர் பின்னணி | Boys Strangled To Death Mum Discovered Hanged

Credit: UGC/UNPIXS

மார்ச் 9ம் திகதி, குறித்த குடும்பம் தொடர்பில் விசாரிக்க வேண்டும் என பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவயிடத்திற்கு அதிகாரிகள் தரப்பு சென்றுள்ளனர்.
இந்த நிலையிலேயே இரு பிள்ளைகள் உட்பட மூவரை சடலமாக மீட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், இந்த வழக்கில் இன்னொருவரின் ஈடுபாடு இல்லை என்றே பொலிசார் உறுதி செய்திருக்கின்றனர்.
இந்த நிலையில், சிறுவன் மாக்சிமஸ் சடலமாக படுக்கையில் காணப்பட்டதும் அலெக்சாண்டர் தரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்ற விசாரணை முன்னெடுக்கபப்ட்டுள்ளது.

லண்டனில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்... தாயாரும் இரண்டு பிள்ளைகளும்: வெளிவரும் பகீர் பின்னணி | Boys Strangled To Death Mum Discovered Hanged

உடற்கூராய்வில் உறுதி

சிறுவர்கள் இருவரும் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளது உடற்கூராய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
குரோஷியன், ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளை சரளமாக பேசும் நட்ஜா கட்டுமான நிறுவனம் ஒன்றை தமது கணவருடன் இணைந்து நடத்தி வந்துள்ளார்.

நட்ஜா மற்றும் இரு சிறுவர்களின் மரணம், அப்பகுதி மக்களை மொத்தமாக உலுக்கியுள்ளது.

லண்டனில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்... தாயாரும் இரண்டு பிள்ளைகளும்: வெளிவரும் பகீர் பின்னணி | Boys Strangled To Death Mum Discovered Hanged



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.