'வசதி படைத்தோருக்கெல்லாம் ரூ.1000 உரிமை தொகை வழங்க முடியுமா?' – அமைச்சர் எ.வ. வேலு பதிலடி

ரேஷன் அட்டை இருக்கிறது என்பதற்காக வசதி படைத்தோருக்கெல்லாம் ரூ.1000 உரிமை தொகை வழங்க முடியாது என அமைச்சர் எ.வ. வேலு  தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசும் போது, தேர்தல் அறிக்கையிலே அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்குவோம் என கூறிவிட்டு தற்போது தகுதி உள்ள பெண்களுக்கு மட்டும் கொடுப்போம் என கூறுவது ஏன்  என கேள்வி எழுப்பினார்.

image
அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் எ.வ. வேலு, ரேஷன் அட்டை உள்ளது என்பதற்காக அனைவருக்கும் 1000 ரூபாய் கொடுக்க முடியாது. இங்கு சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும் நாம் மாதம் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம்  வாங்குகிறோம்.  நம்மிடமும் தான் ரேஷன் அட்டை உள்ளது அதற்காக நமக்கெல்லாம் ஆயிரம் ரூபாய் வழங்க முடியுமா? என கேள்வி எழுப்பினார்..

மேலும் தொடர்ந்து பேசிய அமைச்சர் உரிமைத்தொகை செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது அதற்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கக்கூடிய நிலையில் அதற்குள் யாரெல்லாம் தகுதி உடையவர்கள் என்று பரிசீலனை செய்து  தமிழக அரசு அறிவிக்கும் என தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.