விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே சடலம் வைத்துள்ள குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவால் 12 பேர் காயம் அடைந்துள்ளனர். சடலம் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் 10 பெண்கள் உட்பட 12 பேர் காயம் அடைந்தனர். மின்சாரம் பாய்ந்து காயம் அடைந்த 12 பேரும், விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.