7th Pay Commission: ஊழியர்களின் காத்திருப்பு முடிவடைந்தது.. இந்த நாளில் பம்பர் அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு (7வது ஊதியக் குழு) அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) ஆகியவற்றை மோடி அரசு விரைவில் அதிகரிக்கவுள்ளது. அகவிலைப்படி (டிஏ) வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் திருத்தப்படும். டிஏ மற்றும் ஊதிய உயர்வு பொதுவாக மார்ச் மாதம் அறிவிக்கப்படும். அரசு, மார்ச் 31ம் தேதிக்குள் ஃபிட்மென்ட் ஃபாக்டர் மற்றும் அகவிலைப்படியை (டிஏ) திருத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. தொழிலாளர் அமைச்சகத்தின் கிளையான தொழிலாளர் பணியகம் ஒவ்வொரு மாதமும் CPI-IW தரவை வெளியிடுகிறது. இது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை கணக்கிடுவதற்கான பரிந்துரைக்கப்பட்ட சூத்திரமாகும்.

மத்திய அரசு ஊழியர்கள் இந்த முறை அகவிலைப்படியில் 4 சதவீத உயர்வை எதிர்பார்க்கலாம் என்று நிதி அமைச்சக அதிகாரி தெரிவித்தார். இது தவிர, ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான அகவிலைப்படியும் 4% உயரக்கூடும் என்றும், அகவிலைப்படி உயர்த்தப்பட்டால், அது ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.

அகவிலைப்படி கணக்கீடு:

மத்திய அரசு ஊழியர்களுக்கு: 
அகவிலைப்படியின் கணக்கீடு: {(கடந்த 12 மாதங்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் சராசரி (அடிப்படை ஆண்டு -2001 =100)  -115.76)/115.76} x 100.

மத்திய பொதுத்துறை ஊழியர்களுக்கான அகவிலைப்படி கணக்கீடு: 
{(கடந்த 3 மாதங்களுக்கு அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் சராசரி (அடிப்படை ஆண்டு -2001 =100) -126.33)/126.33} x 100.

அகவிலைப்படி 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டால், ஊழியர்களின் சம்பளத்தில் அகவிலைப்படியும் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிடத்தக்க வகையில், ஒரு ஊழியரின் சம்பள மேட்ரிக்ஸில் உள்ள அளவைப் பொறுத்து அகவிலைப்படி மாறுபடும்.

அகவிலைப்படி அதிகரிப்பு குறித்த சில முக்கியமான தகவல்கள்:

– டிஏ உயர்வு ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வரும்.
– தற்போது, ​​ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 38 சதவீத அகவிலைப்படியை பெறுகின்றனர்.
– இதற்கு முன்னர் அகவிலைப்படியில் செப்டம்பர் 28, 2022 திருத்தம் செய்யப்பட்டது. இது ஜூலை 1, 2022 முதல் அமலுக்கு வந்தது. 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதிதான் கடைசியாக திருத்தம் செய்யப்பட்டது.
– ஜூன் 2022 இல் முடிவடைந்த காலத்திற்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் 12-மாத சராசரியின் சதவீத அதிகரிப்பின் அடிப்படையில், அகவிலைப்படி நான்கு சதவீத புள்ளிகள் அதிகரித்து 38 சதவீதமாக அப்போது உயர்த்தப்பட்டது. 
– விலைவாசி உயர்வை ஈடுகட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது.
– தினசரி செலவுகளில் நாளுக்கு நாள் மாற்றம் ஏற்படுகின்றன. இந்த மாற்றம் CPI-IW மூலம் பிரதிபலிக்கிறது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.