80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் இரண்டு இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள பெரியசோரகை பகுதியை சேர்ந்த இளைஞர்களான சீனிவாசன் வயது 20 மற்றும் விக்னேஷ் வயது 23 இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த 80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இவர்களின் தொல்லை தாங்க முடியாமல் மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் மூதாட்டி இடம் வாக்குமூலம் பெற்றனர். அதனைத் தொடர்ந்து குற்றவாளிகளான விக்னேஷ் மற்றும் சீனிவாசன் இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சீனிவாசன் மற்றும் விக்னேஷ் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.