எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
Aishwarya Rajinikanth jewellery case: நகை திருட்டு தொடர்பாக ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு காரணம் பணிப்பெண் வீட்டில் கிடைத்த நகைகள் ஆகும்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன் வீட்டு லாக்கரில் இருந்து 60 பவுன் நகைகள் திருடு போய்விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தன் வீட்டில் வேலை செய்து வரும் கார் டிரைவர் மற்றும் பணிப்பெண்கள் இரண்டு பேர் மீது சந்தேகமாக இருப்பதாக புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார் ஐஸ்வர்யா. இதையடுத்து பணிப்பெண் ஈஸ்வரியை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
திருட்டுஈஸ்வரி கடந்த நான்கு ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக நகை திருடி வந்தது தெரிய வந்தது. திருடிய நகைகளில் சிலவற்றை விற்று ரூ. 1 கோடிக்கு சொகுசு வீடு வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் கார் டிரைவர் வெங்கடேசனும் கைது செய்யப்பட்டுள்ளார். 60 பவுன் நகைகள் காணாமல் போனதாக ஐஸ்வர்யா தெரிவித்தார். ஆனால் 30 கிராம் வைரம், 100 பவுனுக்கு மேல் தங்க நகைகள், 4 கிலோ வெள்ளிப் பொருட்கள், நகைகளை விற்று சோழிங்கநல்லூரியில் கட்டிய வீட்டு பத்திரம் ஆகியவற்றை கைப்பற்றியிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Aishwarya Rajinikanth:ஐஸ்வர்யா வீட்டில் நகை திருடிய பணிப்பெண் சிக்கினார்: 4 வருஷமா 20 பவுன் திருட்டு
தனுஷ், ரஜினிஈஸ்வரி ஐஸ்வர்யா வீட்டில் மட்டும் அல்லாமல் தனுஷ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோரின் வீடுகளிலும் திருடியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதனால் ஈஸ்வரியிடம் தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது. ஈஸ்வரி மீது நம்பிக்கை வைத்து தான் தன் லாக்கரின் சாவி இருக்கும் இடத்தை தெரிவித்திருத்தார் ஐஸ்வர்யா.
போலீஸ்புகாரில் தெரிவிக்கப்பட்டதை விட கூடுதல் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளார்கள் என தகவல் வெளியாகியிருக்கிறது. நகைகள் வாங்கிய ரசீது உள்ளிட்டவற்றை சரிபார்க்க விரும்புகிறார்களாம். தன் தங்கை சவுந்தர்யாவுக்கும், விசாகனுக்கும் திருமணம் நடந்தபோது தான் நகைகளை எல்லாம் அணிந்திருக்கிறார் ஐஸ்வர்யா. அதன் பிறகு லாக்கரில் வைக்கப்பட்ட நகைகளை கடந்த நான்கு ஆண்டுகளாக சரிபார்க்கவில்லையாம்.
4 ஆண்டுகள்Aishwarya Rajinikanth: இது டூ மச், என்னம்மா ஐஸ்வர்யா இப்படி பண்ணியிருக்கீங்களேமா: ரஜினி, தனுஷ் ரசிகர்கள்
நான்கு ஆண்டுகளாக லாக்கரை திறந்து பார்க்காமலேயே இருந்திருக்கிறார் ஐஸ்வர்யா. இந்நிலையில் தான் அண்மையில் லாக்கரை திறந்து பார்த்தபோது நகைகள் திருடுபோனது தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தார். இந்த நான்கு ஆண்டுகளில் மூன்று வீடுகளில் அந்த லாக்கர் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லால் சலாம்ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் படப்பிடிப்பில் இருந்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். ரஜினிகாந்த் கவுரவத் தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். ஜெயிலர் ஷூட்டிங்கை முடித்த பிறகே லால் சலாம் படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்வார்.