Ak 62: அஜித் ரசிகர்களின் நிலைமையை பார்த்து விஜய் ரசிகர்களே ஆறுதல் கூறும் அளவுக்கு ஆகிவிட்டது.
ஏ.கே. 62துணிவு படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் ஏ.கே. 62 படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என லைகா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டே ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இந்நிலையில் விக்னேஷ் சிவனை நீக்கிவிட்டு மகிழ்திருமேனியை ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆனால் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.
Ajith, AK 62: மகிழ்திருமேனியையும் கழட்டிவிடும் அஜித்?: எஸ்கேப் டா மச்சினு விக்னேஷ் சிவன் ஹேப்பி?
அறிவிப்புமார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிப்பு வரும் என்றார்கள். ஆனால் லைகா நிறுவனம் இதுவரை அமைதியாக இருந்து வருகிறது. இந்நிலையில் தாங்கள் தயாரிக்கும் புதுப்படம் ஒன்றின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து லைகா நிறுவனம் ட்வீட் செய்தது. அது கண்டிப்பாக ஏ.கே. 62 பட ஃபர்ஸ்ட் லுக் கிடையாது என்பது ட்வீட்டை பார்த்தாலே தெரிந்துவிட்டது. அது தீராக் காதலின் அப்டேட் ஆகும்.
லைகா அறிவிப்பு
ரசிகர்கள்லைகா நிறுவனம் போட்ட ட்வீட்டை பார்த்த அஜித் ரசிகர்கள் கோபத்தில் கண்கலங்கிவிட்டார்கள். அவர்கள் கூறியிருப்பதாவது, ஏன்யா எங்க உயிரை எடுக்குறீங்க. தயவு செய்து அப்டேட்டை கொடுத்து தொலைங்க. நாம் எதிர்பார்ப்பதை தவிர மீத எல்லா அப்டேட்டும் சரியாக வந்து கொண்டிருக்கிறது. நிஜமாகவே நீங்க தான் ஏ.கே. 62 படத்தை தயாரிக்கிறீர்களா என்று சந்தேகமாக இருக்கிறது. கடை வரைக்கும் ஏ.கே. 62 அப்டேட் பற்றி பேசவே மாட்டீங்களா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
எரிச்சல்
தளபதியன்ஸ்அஜித் ரசிகர்களின் நிலைமையை பார்த்து விஜய் ரசிகர்களே பரிதாபப்பட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். விஜய் ரசிகர்கள் கூறியிருப்பதாவது, அஜித் ரசிகர்களை பார்த்தால் பாவமாக இல்லையா. தயவு செய்து ஏ.கே. 62 பட அப்டேட்டை உடனே வெளியிடவும். தயாரிப்பு நிறுவனம் மாறினாலும் அப்டேட் கொடுக்கும் விஷயத்தில் தல ரசிகர்களை அலைய விடுவது மட்டும் இன்னும் மாறியபாடில்லை என தெரிவித்துள்ளனர்.
கோபம்கோபத்தின் உச்சிக்கே சென்ற அஜித் ரசிகர்கள் சிலரோ, ட்விட்டரில் லைகா நிறுவனத்தை பின்தொடர்வதை நிறுத்திவிடலாமா என கேள்வி எழுப்பியுள்ளனர். ஏ.கே. 62 பட அப்டேட்டை எதிர்பார்த்து லைகாவின் ட்விட்டர் பக்கமே கதி என்று இருந்து வருகிறார்கள் அஜித் ரசிகர்கள். அதனால் தான் இந்த அளவுக்கு கோபப்பட்டு கத்திக் கொண்டிருக்கிறார்கள்.
கடுப்பு
விஷ்ணுவர்தன்ஏ.கே. 62 படத்தை மகிழ்திருமேனி தான் இயக்குகிறார் என்று அறிவிப்பு வெளியாகும் வரை நம்ப முடியாது போன்று. இந்த மாத இறுத்திக்குள் ஃபைனல் ஸ்க்ரிப்ட் தயாராகவில்லை என்றால் ஏ.கே. 62 படத்தில் மகிழ்திருமேனியும் இருக்க மாட்டார் என கூறப்படுகிறது. இதற்கிடையே ஏ.கே. 62 படத்தை விஷ்ணுவர்தன் இயக்க வேண்டும் என்று அஜித் விரும்பினாராம். ஆனால் விஷ்ணுவர்தனம் மூன்று படங்களில் கமிட்டாகியிருப்பதால் ஏ.கே. 62 படத்தை இயக்க முடியாது என்று கூறிவிட்டாராம்.
AK62 Ajith: விக்னேஷ் சிவனுக்கு பதில் வாரிசு இயக்குநரை கேட்ட அஜித்: டேட்ஸ் இல்ல தலனு கைவிரிச்சுட்டாராம்
https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/ajith-kumar-wanted-this-director-for-ak62-but-he-could-not-say-yes/articleshow/98900474.cms