எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாதையை வகுத்து அதில் பயணம் செய்து வருகின்றார் அஜித். பட்டம் வேண்டாம், ரசிகர் மன்றம் வேண்டாம் என பல தைரியமான முடிவுகளை அஜித் எடுத்துள்ளார். இதுவே அவரை மேலும் ரசிகர்கள் நேசிக்க ஒரு காரணமாக அமைந்துள்ளது எனலாம்.
முதலில் உங்கள் குடும்பத்தை பாருங்கள், பிறகு நேரம் கிடைத்தால், என் படம் நன்றாக இருந்தால் என் படத்தை பாருங்கள் என கூறியவர் தான் அஜித். இதைத்தொடர்ந்து தன் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் உட்பட எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாமல் இருப்பதை வழக்கமாக வைத்துள்ளார் அஜித்.
Ajith: தன் தந்தையை பற்றி முதல்முறையாக பேசிய அஜித்..வைரலாகும் வீடியோ..!
இதனை பலர் விமர்சித்தாலும் தன் கொள்கையை மாற்றாமல் இருக்கின்றார் அஜித். இந்நிலையில் திரைத்துறையில் அஜித் பலபேருக்கு பல உதவிகளை செய்துள்ளார். மேலும் தான் செய்யும் உதவிகள் யாருக்கும் தெரியக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்து வருகின்றார்.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
பணஉதவி மட்டும் செய்யாமல் அஜித் பலருக்கு வாய்ப்புகளையும் வழங்கியுள்ளார்.பல புதுமுக இயக்குனர்களின் படங்களில் நடித்து அவர்களுக்கு இயக்குனர் வாய்ப்புகளை வழங்கியுள்ள அஜித் சில நடிகர்களுக்கும் தன்னால் முடிந்த வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளார்.
அந்த வகையில் அஜித் மற்றும் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் உல்லாசம். இப்படத்தை ஜேடி ஜெர்ரி இயக்க அமிதாப் பச்சன் தயாரித்திருந்தார். இதில் அஜித்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு கதையை அமைத்திருந்தனர் இயக்குனர்கள்.
ஆனால் விக்ரம் அந்த காலகட்டத்தில் ஒரு வெற்றிக்காக போராடி வந்தார். அந்த சமயத்தில் அவருக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்தால் அவரின் திரைவாழ்க்கைக்கு நன்றாக இருக்கும் என்று எண்ணிய அஜித் விக்ரமிற்கும் தனக்கு நிகரான கதாபாத்திரத்தை கொடுக்குமாறு கூறியுள்ளார். அதன் படி விக்ரமிற்கும் அஜித்திற்கு சமமான ரோலை கொடுத்தனர். ஒரு வெற்றிப்படத்திற்காக விக்ரம் கஷ்டப்பட்டு உழைத்து வந்ததை பார்த்து அஜித் இவ்வாறு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.