தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல பாடல்களை பாடியவர் பாம்பே ஜெயஸ்ரீ. பாடகியும், கர்நாடக இசைக்கலைஞருமான இவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘மின்னலே’ படத்தில் இடம்பெற்ற ‘வசீகரா’ பாடல் இன்றளவு ரசிகர்களின் பேவரைட் பிளே லிஸ்டில் உள்ளது. இந்தப்பாடலை பாடியதன் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார் பாம்பே ஜெயஸ்ரீ. இது மட்டும் இல்லாமல் ‘காக்கா காக்கா’ படத்தின் ஒன்றா இரண்டாய், மஜ்னு படத்தில் இடம்பெற்ற ‘முதல் கனவே’ உள்ளிட்ட ஏகப்பட்ட ஹிட் பாடல்களை பாடியுள்ளார் இவர்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களான இசைஞானி இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டவர்களின் இசையில் பாடியுள்ளார் பாம்பே ஜெயஸ்ரீ. ஹாரிஸ் இசையில் இவர் பல பாடல்களை பாடியுள்ளார். படங்களில் பாடியதோடு மட்டுமில்லாமல் பல்வேறு இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார் இவர்.
Steeve Vatz: திரைத்துறையில் அடுத்த அதிர்ச்சி: ‘வாரணம் ஆயிரம்’ பட பிரபலம் திடீர் மரணம்.!
இந்நிலையில் பாம்பே ஜெயஸ்ரீ லண்டனில் நடைபெறும் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொள்ள சென்றுள்ள நிலையில்,அங்கு அவர் தவறி விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பாம்பே ஜெயஸ்ரீ சுயநினைவை இழந்துள்ளார். இதனையடுத்து அவருக்கு லண்டனிலே அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Viduthalai: ‘விடுதலை’ படம் குறித்து வெளியான அதிர்ச்சிகரமான தகவல்: ரசிகர்கள் ஷாக்.!