பங்குனி உத்திர திருநாளையொட்டி ஏப்ரல் 5ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்குனி மாத பௌர்ணமியும், உத்திர நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளே பங்குனி உத்திர விழாவாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருநாள் வரும் ஏப்ரல் மாதம் 5-ஆம் தேதி புதன்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் துரை.ரவிசந்திரன் தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.
மேலும், இந்த விடுமுறை பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. இதற்கு முன்பாக, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், வருகிற ஏப்ரல் 5-ஆம் தேதி பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.