Pathu thala: கதையில் அந்த ஒரு விஷயம் இருந்தால் சம்பளத்தை குறைக்க தயார்..கொள்கையை தளர்த்த சிம்பு..!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
சிம்பு மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களின் வெற்றிக்கு பிறகு தன் சம்பளத்தை பலமடங்கு அதிகரித்துவிட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. இடையில் ஒரு காலகட்டத்தில் படமே இல்லாமல் வந்த சிம்பு பல இன்னல்களை சந்தித்தார். பின்பு மீண்டு வந்து மாநாடு என்ற படத்தில் நடித்து தான் யார் என நிரூபித்தார் சிம்பு.

அப்படத்தின் மூலம் சிம்புவின் மார்க்கெட் கிடுகிடுவென உயர்ந்தது. பின்பு வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றி அவரை அடுத்தகட்டத்துக்கு கொண்டு சென்றது. எனவே இதான் நல்ல வாய்ப்பு என எண்ணிய சிம்பு தன் சம்பளத்தை பல மடங்கு உயர்த்தினார்.

Ajith: தன் தந்தையை பற்றி முதல்முறையாக பேசிய அஜித்..வைரலாகும் வீடியோ..!

கிட்டத்தட்ட 40 கோடி வரை சிம்பு தன் சம்பளத்தை உயர்த்தினார். இதனால் எந்த படத்திலும் கமிட்டாகாமல் விடாப்பிடியாக இருந்து வந்தார் சிம்பு. தற்போது சிம்பு நடிப்பில் கிருஷ்ணாவின் இயக்கத்தில் பத்து தல திரைப்படம் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து சிம்பு தன் சம்பள விவகாரம் காரணமாக எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருந்தார்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இந்த சமயத்தில் தான் உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிப்பதற்கான வாய்ப்பு அமைந்தது. தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக தயாராகும் படத்தில் சிம்பு கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்திற்காக சிம்பு தன் சம்பளத்தை கணிசமாக குறைத்துள்ளாராம்.

40 கோடிவரை சம்பளமாக கேட்டு வந்த சிம்பு இப்படத்திற்காக 25 கோடியை சம்பளமாக வாங்கவுள்ளார். இதற்கு என்ன காரணம் என்றால் கதையில் பிரம்மாண்டம் இருந்தால் தன் சம்பளத்தை எவ்வளவு வேண்டுமானாலும் குறைப்பேன் என சிம்பு தன் கொள்கையை தளர்த்துள்ளாராம்.

தன்னை வைத்து மிகப்பிரம்மண்டமான படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்காக தன் சம்பளத்தை குறைக்க தயாரான சிம்புவின் இந்த நடவடிக்கை பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. சிம்பு இவ்வாறு நடந்துகொண்டால் அவர் திரைவாழ்க்கையில் மென்மேலும் இடத்திற்கு செல்வார் என திரைத்துறையை சார்ந்தவர்கள் கருது தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.