மணிரத்னத்தின் இயக்கத்தில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வெளியான பொன்னியின் செல்வன் படத்தை இந்தியளவில் ரசிகர்கள் கொண்டாடினார்கள். விக்ரம், த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
பலவருடங்களாக பொன்னியின் செல்வன் கதையை படமாக்க முயன்ற மணிரத்னத்தின் முயற்சிக்கு சிறப்பான பலன் கிடைத்தது எனலாம். விஜய், மகேஷ் பாபு துவங்கி சிம்பு, நயன்தாரா வரை பல நடிகர்களை பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கவைக்க முயற்சி செய்தார் மணிரத்னம். ஆனால் அது எதுவும் கைகூடவில்லை.
Rajini: உயிரை காப்பாற்ற உதவும் ரஜினி..சூப்பர்ஸ்டார் சூப்பர்ஸ்டார் தான்பா..!
இதையடுத்து பல போராட்டங்களுக்கு பிறகு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை ஒன்று சேர்த்து லைக்கா நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை மிகப்பிரமாண்டமாக தயாரித்தார் மணிரத்னம். இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு வெளியான நிலையில் அடுத்த மாதம் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது.
ஆனால் முதல் பாகத்திற்கு இருந்த ஹைப் இரண்டாம் பாகத்திற்கு இல்லை என்ற பேச்சுகளும் எழுந்து வருகின்றது. என்னதான் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றியை பெற்றாலும் இரண்டாம் பாகத்திற்கு அந்தளவிற்கு எதிர்பார்ப்பு இல்லை என்கின்றனர் சிலர்.
எனவே எதிர்பார்ப்பை கூட்டும் வகையில் தயாரிப்பு நிறுவனமும் மணிரத்னமும் இணைந்து படத்தின் இசை வெளியீட்டை விழாவை மிகப்பிரமாண்டமாக நடத்த முடிவெடுத்துள்ளனர். முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய்யை சிறப்பு விருந்தினராக அழைக்க படக்குழு யோசித்து வருவதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் கடந்த பல வருடங்களாக விஜய் தன் படங்களை தவிர்த்து பிற படங்களின் விழாவிற்கு செல்லாமல் இருந்து வருகின்றார்.
எனவே பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள விஜய் சம்மதிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருந்தாலும் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க அழைத்தும் நடிக்காத விஜய் இப்படத்தின் விழாவிலாவது கலந்துகொண்டால் நன்றாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. இந்நிலையில் விஜய் கலந்துகொள்வாரா? இல்லையா ? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்