Rahul Gandhi: 'ஒற்றை மனிதனுக்கு அஞ்சி நடுங்கும் பாஜக'.. – அனல் பறக்கும் ட்வீட்கள்..!

மோடியை குறித்து அவதூறாக பேசியதாக பதியப்பட்ட வழக்கில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்துள்ளது. இந்த பரபரப்பு ஓய்வதற்குள் வயநாடு எம்பி பதவியில் இருந்தும் ராகுல் காந்தி நீக்கப்பட்டு அந்த தொகுதி காலியென அறிவித்துள்ளது மக்களவை செயலகம். இதனால் தண்டனை காலம் 2 ஆண்டுகள் மற்றும் அதற்கு பிறகான 6 ஆண்டுகள் என 8 ஆண்டுகளுக்கு ராகுல் காந்தியால் தேர்தலில் நிற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இதற்கு பாஜகவின் பழி வாங்கும் அரசியல்தான் காரணம் என்று காங்கிரசும் மற்ற எதிர்கட்சிகளும் குற்றம்சாட்டுகின்றனர். அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரும்நிலையில் ராகுல் காந்தியின் இந்த சிறை தண்டனை, பதவி நீக்க விவகாரம் நாடளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் விவாதிக்க தொடங்கிவிட்டனர். அந்த வகையில், சமூக வலைத்தளங்களில் ராகுல் காந்திக்கு ஆதரவான பதிவுகள் அனல் பறக்கின்றன. அவற்றை பார்க்கலாம்

#rahulgandhi என்ற ஹேஷ் டேகுடன் ட்ரெண்டாகும் பதிவுகள்:

”அரண்மனையிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னரே பாகுபலி யாரென்று மகிழ்மதி அரசுக்கு தெரியவந்தது. அவன் எங்கிருந்தாலும் அரசன்தான்”

‘ராகுல் காந்தி பிரதமர் ஆவது உறுதியாகி விட்டது. எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வதும் உறுதியாகி விட்டது. மோடிக்கு ராகுல் காந்தியைப்பார்த்து பயம் வந்து விட்டது. பாஜகவின் அழிவு ஆரம்பமாகி விட்டது.”

”கடைசியில் ராகுல் காந்தி பிரதமர் ஆக பாஜக உதவ ஆரம்பித்திருக்கிறது. சிறப்பு.”

”மன்னிப்பு கேட்கிறீர்களா சிறைக்கு செல்கிறீர்களா -நீதிபதி

மன்னிப்பு கேட்க மாட்டேன் -ராகுல் காந்தி”

”சிறு குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொடூர கொலை செய்தவனும் ரோட்டில் மதுபோதையில் 6 பேரை காவு வாங்கியவர்கள் எல்லாம் நாட்டிற்கு நல்லது செய்தது போன்று ராஜமரியாதையோடு விடுதலைசெய்ய படுகிறார்கள். ஆனால் மக்களுக்காக வார்த்தை போர் செய்தவர்களுக்கு 2 வருட தண்டனை எங்கே என்ன ஜனநாயகம்”

”இந்த செயல் அதானியை மறக்கடித்து ராகுல் காந்தியை பேச வைக்கும். காங்கிரஸ் ராகுல் காந்தியை பற்றி பேசும்போது அதானியை மறக்கக்கூடாது. அதற்குத்தான் இந்த இந்துத்துவ கூட்டம் அஞ்சி நடுங்குகிறது என்று தெளிவாக தெரிந்துவிட்டது”

”பாஜக அரசு தொடர்ந்து ராகுல்காந்தியின் முகத்தை இந்தியாவிற்கு பிரபலப்படுத்தி வருகிறது. இது 2024 தேர்தலில் பிரதிபலிக்கும்”

இதுபோன்ற கமெண்டுகளை பதிவிட்டு ராகுல் காந்திக்கு ஆதரவாக நெட்டிசன்கள் ட்வீட் போட்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.