எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்த கீத கோவிந்தம் படம் மூலம் பிரபலமானவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ரஷ்மிகா மந்தனா.
கார்த்தியின் சுல்தான் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். இதையடுத்து தனக்கு மிகவும் பிடித்த நடிகரான தளபதி விஜய்யுடன் சேர்ந்து வாரிசு படத்தில் நடித்தார் ரஷ்மிகா.
அவர் பேட்டி ஒன்றில் கூறிய விஷயத்தை கேட்டு வியப்பவர்களும் உண்டு, கிண்டல் செய்பவர்களும் உண்டு. பேட்டியில் ரஷ்மிகா கூறியதாவது,
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
சின்னச் சின்ன விஷயங்கள் கூட எனக்கு முக்கியம். காலையில் எழுந்து என் செல்லப் பிராணிகளுடன் நேரம் செலவிடுவேன். என் நண்பர்களை சந்திப்பேன். அது எனக்கு சந்தோஷத்தை அளிக்கும். வார்த்தைகளுக்கு அதிக பவர் உண்டு. அது ஒரு மனிதனை உருவாக்கவும் செய்யும், அழிக்கவும் செய்யும். அதனால் தான் யாராவது ஏதாவது சொன்னால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன்.
சிறு விபரங்களையும் என் டைரியில் எழுதி வைப்பேன். எங்கள் வீட்டில் தினமும் அனைவரின் காலை தொட்டு கும்பிடுவேன். மரியாதையால் அப்படி செய்வது. யாரையும் பிரித்துப் பார்க்கக் கூடாது என்பதால் எங்கள் வீட்டில் வேலை செய்பவரின் காலையும் தொட்டு கும்பிடுவேன். தினமும். இது தான் நான் என்றார்.
Vishnu Vishal: 2வது மனைவியையும் பிரிந்துவிட்டாரா விஷ்ணு விஷால்?!
ரஷ்மிகா சொன்னதை கேட்ட ரசிகர்கள் கூறியிருப்பதாவது,
என்ன ஒரு மரியாதை. நல்லபடியாக வளர்த்திருக்கிறார்கள். வீட்டில் வேலை செய்பவரின் காலை தொட்டு கும்பிடுவது எல்லாம் வேற லெவல் என்று தெரிவித்துள்ளனர்.
சமூக வலைதளவாசிகள் கூறுவதாவது,
வார்த்தையை பற்றி இவ்வளவு பேசும் ரஷ்மிகா ஏன் கன்னட ரசிகர்களை அவ்வப்போது கோபம் அடைய செய்கிறார். வீட்டில் வேலை செய்பவரின் காலை தொட்டு கும்பிடுகிறேன் என ரஷ்மிகா சொல்வது நம்பும்படியாக இல்லை. பேட்டிக்காக அடுச்சுவிட்டிருக்கிறார் என்கிறார்கள்.
கெரியரை பொறுத்தவரை அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். கோலிவுட், டோலிவுட் தவிர்த்து பாலிவுட்டிலும் பிசியாகிவிட்டார் ரஷ்மிகா. சந்தீப் வாங்கா ரெட்டியின் இயக்கத்தில் ரன்பிர் கபூருடன் சேர்ந்து அனிமல் இந்தி படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார்.
மேலும் வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதின் ஜோடியாக நடிக்கவிருக்கிறார். முன்னதாக பீஷ்மா படத்திற்காக இந்த கூட்டணி சேர்ந்தது.
விஜய்யின் வாரிசு படத்தை ரஷ்மிகா பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால் படம் பார்த்த யாரும் ரஷ்மிகாவை கண்டுகொள்ளவில்லை. விஜய்யின் அம்மாவாக நடித்த ஜெயசுதா, அப்பா சரத்குமார் பற்றி தான் ரசிகர்கள் பேசினார்கள்.
ரஷ்மிகாவை பெயருக்கு ஹீரோயினாக நடிக்க வைத்திருக்கிறார் வம்சி பைடிபல்லி. அவர் தொடர்பான காட்சிகளை நீக்கினாலும் படம் நன்றாகத் தான் இருக்கும் என வாரிசை பார்த்தவர்கள் விமர்சித்தார்கள்.
ஆசை, ஆசையாக விஜய்யுடன் சேர்ந்து நடித்தார் ரஷ்மிகா. ஆனால் பாவம் இப்படியாகிவிட்டதே என ரசிகர்கள் ஃபீல் செய்தார்கள். இதற்கிடையே விஜய் தேவரகொண்டாவும், ரஷ்மிகாவும் காதலிப்பதாக அவ்வப்போது பேசப்பட்டு வருகிறது. இருவரும் ஜோடியாக மாலத்தீவுகளுக்கு சென்றதை பார்த்தவர்களோ, இது காதலே தான் என்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Aishwarya Rajinikanth: சொன்னது 60 பவுன், கிடைத்தது 100 பவுன்: ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் விசாரிக்கும் போலீஸ்?