எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
இந்தியாவில் மிட் பிரீமியம் பட்ஜெட் ஸ்மார்ட்போன் செக்மென்ட்டில் சமீபத்தில் சாம்சங் நிறுவனம் A34 5G மற்றும் A54 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. தற்போது இதேபோல பட்ஜெட் செக்மென்ட்டில் அதன் F சீரிஸ் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.
இந்த புதிய Galaxy F14 5G ஸ்மார்ட்போன் ஏற்கனவே சாம்சங் விற்பனை செய்யும் Galaxy A14 5G ஸ்மார்ட்போனின் அதே வசதிகளை கொண்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் இருக்கும் முக்கிய வித்யாசம் இதன் பாஸ்ட் சார்ஜிங் மட்டுமே. மேலும் பயனில்லாமல் இருந்த கூடுதல் 2MP சென்சார் நீக்கப்பட்டுள்ளது. இந்த போனில் Exynos 1330 சிப் வசதி, 128GB ஸ்டோரேஜ், 6000mAh பேட்டரி வசதி போன்றவை உள்ளன.
டிஸ்பிளே மற்றும் வசதிகள் இதில் 6.6 இன்ச் IPS LCD டிஸ்பிளே உள்ள முழு HD+ Resolution, 90HZ refresh rate, இன்பினிட்டி V நோட்ச், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, Exynos 1330 5nm சிப் வசதி உள்ளது.
இதில் 6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வசதி, 12GB வரை Virtual RAM மூலம் நீட்டித்துக்கொள்ளலாம். இதில் Android 13 சார்ந்து உருவாக்கப்பட்ட OneUI Core 5.1 உள்ளது.
கேமரா வசதிகள் இந்த ஸ்மார்ட்போனை நாம் வாங்குவதால் நமக்கு இரண்டு முறை OS அப்டேட் மற்றும் நான்கு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட் வழங்கப்படும். இதில் பின்புறம் 50MP + 2MP டூயல் கேமரா உள்ளது. இதன் முன்பக்கம் 13MP செல்பி கேமரா உள்ளது.
முக்கிய வசதிகள் முக்கியமாக 5000mAh பேட்டரி மற்றும் 25W பாஸ்ட் சார்ஜிங் வசதிகள், 13 5G பேண்ட், USB Type-C, ப்ளூடூத் 5.2, Wi-Fi, GPS, NFC போன்றவை உள்ளன. இதில் மேலும் சைடு மவுண்ட் பிங்கர் பிரிண்ட் வசதி உள்ளது.
Samsung F14 5G OS Android OS என்று பார்த்தால் முன்னணி Custom UIகளில் ஒன்றாக சாம்சங் One UI உள்ளது. இதில் நமக்கு தனிப்பட்ட வசதிகள் பல கிடைக்கும்.
Samsung F14 5G Processorஇந்தியாவிலேயே முதல் முறையாக 5nm Processor கொண்ட ஒரே பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக இந்த சாம்சங் F14 5G உள்ளது. இதனால் அதிவேக பயன்பாட்டிற்கு சிறந்ததாக இருக்கும்.
விலை விவரம் (Samsung F14 5G Price)இதன் பேஸ் 4GB RAM + 128GB ஸ்டோரேஜ் மாடல் 12,990 ஆயிரம் ரூபாய் விலையிலும், 6GB + 128GB ஸ்டோரேஜ் மாடல் 14,490 ஆயிரம் ரூபாய் விலையிலும் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் OMG Black, GOAT Green மற்றும் BAE Purple ஆகிய கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட், சாம்சங் e-Store மூலம் விற்பனை செய்யப்படும். இதன் விற்பனை மார்ச் 30, 12PM முதல் பிளிப்கார்ட் மூலம் விற்பனை செய்யப்படும்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்