எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
விஷ்ணு விஷாலுக்கும், பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் தேதி அவர்களுக்கு திருமணம் நடந்தது.
காதலி ஜுவாலா கட்டாவை திருமணம் செய்த விஷ்ணு விஷால்: வைரல் போட்டோ
மனைவியுடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார் விஷ்ணு விஷால். ஜுவாலா கட்டாவும் அப்படித் தான் செய்தார்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்நிலையில் விஷ்ணு விஷாலும், ஜுவாலா கட்டாவும் பிரிந்துவிட்டார்கள் என பேச்சு கிளம்பியிருக்கிறது. விஷ்ணு விஷால் இன்று போட்ட ட்வீட்டால் தான் விவாகரத்து பேச்சு கிளம்பியுள்ளது.
விஷ்ணு விஷால் ட்விட்டரில் கூறியதாவது,
பரவாயில்லை. நான் மீண்டும் முயற்சி செய்தேன். மீண்டும் தோல்வி அடைந்தேன். மீண்டும் கற்றுக்கொண்டேன். கடந்த முறை தோல்வியும் அல்ல, என் தவறும் அல்ல. அது துரோகம் என தெரிவித்தார்.
விஷ்ணு விஷாலின் ட்வீட்டை பார்த்தவர்களோ,
ஜுவாலா கட்டாவையும் பிரிகிறார் போன்று. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கூட ஆகவில்லையே விஷ்ணு விஷால். அதற்குள் என்ன நடந்தது?. இந்த திருமணமாவது கடைசி வரை நிலைத்து நிற்கும் என்று எதிர்பார்த்தோமே. இப்படியாகிவிட்டதே.
ஜுவாலாவுக்கும், உங்களுக்கும் இடையே என்ன தான் பிரச்சனை என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தில் இருந்து விலகியது குறித்து தான் இந்த ட்வீட். விவாகரத்து பற்றி இல்லை என்று சிலர் தெரிவித்துள்ளனர். ஆளாளுக்கு பேசத் துவங்கிய நிலையில் அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார் விஷ்ணு விஷால்.
Aishwarya Rajinikanth: சொன்னது 60 பவுன், கிடைத்தது 100 பவுன்: ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் விசாரிக்கும் போலீஸ்?
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால். அந்த படத்தில் விக்ராந்த், ஜீவிதா ராஜசேகர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜுவாலா கட்டாவுடன் விஷ்ணு விஷாலுக்கு நடந்து இரண்டாவது திருமணமாகும். முன்னதாக நடிகர் ேகே. நட்ராஜின் மகள் ரஜினியை காதலித்து கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
நான்கு ஆண்டுகளாக காதலித்த பிறகு மணந்தார்கள். அவர்களுக்கு ஆர்யன் என்கிற மகன் இருக்கிறார். 8 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டு விவாகரத்து பெற்றார்கள்.
விவாகரத்திற்கு பிறகு அம்மாவுடன் இருக்கிறார் ஆர்யன். இருப்பினும் அவ்வப்போது அப்பாவுடனும் இருக்கிறார். ஜுவாலா கட்டாவுடன் விஷ்ணு விஷாலுக்கு நெருக்கம் ஏற்பட்டதால் தான் அவர் ரஜினியை பிரிந்தார் என்று கூறப்பட்டது.
ஆனால் தானும், ரஜினியும் பிரிய ஜுவாலா கட்டா காரணம் இல்லை என்றார் விஷ்ணு விஷால். நடிகர் விஷால் வீட்டு விசேஷத்தில் தான் ஜுவாலா கட்டாவை முதல்முறையாக சந்தித்ததாகவும் கூறினார்.
ரஜினியும், விஷ்ணு விஷாலும் மிகவும் டீசென்டாக பிரிந்தார்கள். பிரிவுக்கு பிறகு ஒருவரையொருவர் குறை சொல்லி பேட்டி கொடுக்கவில்லை, அறிக்கை வெளியிடவில்லை. அந்த குணம் தான் ரசிகர்களை கவர்ந்தது.
ஜுவாலாவை விஷ்ணு விஷால் மணந்தபோது இவர் வேண்டாம், தயவு செய்து ரஜினி அண்ணியுடனேயே மீண்டும் சேர்ந்து வாழுங்கள் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்தார்கள்.