What to watch on Theatre & OTT: John Wick 4, Sengalam – இந்த வாரம் என்னென்ன படங்கள் பார்க்கலாம்?!

பருந்தாகுது ஊர்க்குருவி (தமிழ்)

பருந்தாகுது ஊர்க்குருவி

தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில் விவேக் பிரசன்னா, நிஷாந்த் ரூசோ, காயத்திரி ஐயர், வினோத் சாகர், வடிவேல், அருள் டி சங்கர், இ.ராமதாஸ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பருந்தாகுது ஊர்குருவி’. இத்திரைப்படம் மார்ச் 24ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

N4 (தமிழ்)

N4

லோகேஷ் குமார் இயக்கத்தில் அனுபமா குமார், மைக்கேல் தங்கதுரை, கேப்ரியல்லா செல்லஸ், அப்சல் ஹமீத், வினுஷா தேவி, அக்‌ஷய் கமல், பிரக்யா நாக்ரா, அபிஷேக் சங்கர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘N4’. இத்திரைப்படம் மார்ச் 24ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Vellaripattanam (மலையாளம்)

Vellaripattanam

மகேஷ் வெட்டியார் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், மஞ்சு வாரியர், ஷபரீஷ் வர்மா, கோட்டயம் ரமேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாள மொழித் திரைப்படம் ‘Vellaripattanam’. இத்திரைப்படம் மார்ச் 24ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Ranga Maarthaanda (தெலுங்கு)

Ranga Maarthaanda

கிருஷ்ண வம்சி இயக்கத்தில் ஆதர்ஷ் பாலகிருஷ்ணா, அனசுயா பரத்வாஜ், பிரம்மானந்தம் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு மொழித் திரைப்படம் ‘Ranga Maarthaanda’. இத்திரைப்படம் மார்ச் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Das Ka Dhamki (தெலுங்கு)

Das Ka Dhamki

விஷ்வக் சென் இயக்கி, நாயகனாகவும் நடிக்க, நிவேதா பெத்துராஜ், ராவ் ரமேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு மொழித் திரைப்படம் ‘Das Ka Dhamki’. இத்திரைப்படம் மார்ச் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Bheed (இந்தி)

Bheed

‘ஆர்டிகள் 15’ இயக்குநர் அனுபவ் சின்ஹா இயக்கத்தில் ராஜ்குமார் ராவ், பூமி பெட்னேகர், தியா மிர்சா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி மொழித் திரைப்படம் ‘Bheed’. இத்திரைப்படம் மார்ச் 24ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

John Wick: Chapter 4 (ஆங்கிலம்)

John Wick: Chapter 4

சாட் ஸ்டாஹெல்ஸ்கி இயக்கத்தில் கீனு ரீவ்ஸ், லாரன்ஸ் ஃபிஷ்பர்ன், டோனி யன், இயான் மெக்‌ஷேன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில மொழித் திரைப்படம் ‘John Wick: Chapter 4’. இத்திரைப்படம் மார்ச் 24ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த வார ஓ.டி.டி ரிலீஸ்கள்

Sengalam (தமிழ்) – Zee5

Sengalam

எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் வாணி போஜன், கலையரசன், வேல ராமமூர்த்தி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ், தெலுங்கு மொழி வெப்சீரிஸ் ‘செங்களம்’. இது மார்ச் 24ம் தேதி (இன்று) ‘Zee5’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Purusha Pretham (மலையாளம்) – SonyLiv

Purusha Pretham

கிரிஷாந்த் இயக்கத்தில் தர்ஷனா ராஜேந்திரன், கீதி சங்கீதா, மாலா பர்வத் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாள மொழித் திரைப்படம் ‘Purusha Pretham’. இத்திரைப்படம் மார்ச் 24ம் தேதி (இன்று) ‘SonyLiv’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Kanjoos Makhichoos (இந்தி) – Zee5

Kanjoos Makhichoos

விபுல் மேத்தா இயக்கத்தில் குணால் கெம்மு, ஸ்வேதா திரிபாதி, பியூஷ் மிஸ்ரா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாள மொழித் திரைப்படம் ‘Kanjoos Makhichoos’. இத்திரைப்படம் மார்ச் 24ம் தேதி (இன்று) ‘Zee5’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Chor Nikal Ke Bhaga (இந்தி) – Zee5

Chor Nikal Ke Bhaga

அஜய் சிங் இயக்கத்தில் யாமி கெளதம், சன்னி கௌஷல், ஷரத் கேல்கர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி மொழித் திரைப்படம் ‘Chor Nikal Ke Bhaga’. இத்திரைப்படம் மார்ச் 24ம் தேதி (இன்று) ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Tooth Pari: When Love Bites (இந்தி) – Netflix

Tooth Pari: When Love Bites

பிரதீம் டி. குப்தா இயக்கத்தில் தன்யா மாணிக்தலா, சாந்தனு மகேஸ்வரி, தில்லோடமா ஷோம் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி மொழித் திரைப்படம் ‘Tooth Pari: When Love Bites’. இத்திரைப்படம் கடந்த மார்ச் 20ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Lucky Hank (ஆங்கிலம்) – SonyLiv

Lucky Hank

பால் லிபர்ஸ்டீன், ஆரோன் ஜெல்மேன் இயக்கத்தில் பாப் ஓடென்கிர்க், ஆர்தர் கெங், ஹெய்க் சதர்லேண்ட் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில மொழி வெப்சீரிஸ் ‘Lucky Hank’. இந்த வெப்சீரிஸ் கடந்த மார்ச் 20ம் தேதி ‘SonyLiv’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Waco: American Apocalypse (ஆங்கிலம்) – Netflix

Waco: American Apocalypse

டில்லர் ரஸ்ஸல் இயக்கத்தில் டேவிட் திபோடோ, கிறிஸ் விட்காம்ப், லீ ஹான்காக் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில மொழி ஆவணப்பட வெப்சீரிஸ் ‘Waco: American Apocalypse’. இந்த வெப்சீரிஸ் கடந்த மார்ச் 20ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

The Night Agent (ஆங்கிலம்) – Netflix

The Night Agent

ஷான் ரையானின் ஆக்கத்தில் கேப்ரியல் பாஸ்ஸோ, லூசியான் புக்கானன், ஃபோலா எவன்ஸ்-அகிங்போலா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில மொழி வெப்சீரிஸ் ‘The Night Agent’. இந்த வெப்சீரிஸ் கடந்த மார்ச் 20ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Who Were We Running From? (துருக்கி) – Netflix

Who Were We Running From?

Melisa Sözen, Eylül Tumbar,Musa Uzunlar ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள துருக்கி மொழி வெப்சீரிஸ் ‘Who Were We Running From?’. இந்த வெப்சீரிஸ் கடந்த மார்ச் 20ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

தியேட்டர் டு ஓ.டி.டி ரிலீஸ்கள்

பகாசூரன் (தமிழ்) – Amazon Prime Video

பகாசூரன்

பழைய வண்ணாரப் பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம், படங்களை இயக்கிய மோகன்.ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பகாசூரன்’. செல்வராகவன், நட்டி, மன்சூர் அலிக்கான் உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Poovan (மலையாளம்) – Zee5

Poovan

வினீத் வாசுதேவன் இயக்கத்தில் கிரிஷ் ஏ.டி., அன்னீஸ் ஆபிரகாம், அர்ஷத் அலி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘Poovan’ திரைப்படம் தற்போது ‘Zee5’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

பதான் (தமிழ்/இந்தி) – Amazon Prime Video

Pathaan | பதான்

ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பதான்’. இத்திரைப்படம் இந்தி, தமிழ் உட்படப் பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த நிலையில் தற்போது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Vinaro Bhagyamu Vishnu Katha (தெலுங்கு) – Aha

Vinaro Bhagyamu Vishnu Katha (VBVK)

முரளி கிஷோர் அப்புரு இயக்கத்தில் கிரண் அப்பாவரம், காஷ்மீரா பர்தேஷி முரளி, சர்மா உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த தெலுங்கு மொழி திரைப்படமான ‘Vinaro Bhagyamu Vishnu Katha’ தற்போது ‘Aha’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

De Dhakka 2 (மராத்தி) – Zee5

De Dhakka 2

மகேஷ் மஞ்ச்ரேக்கர், சுதேஷ் மஞ்ச்ரேக்கர் இயக்கத்தில் பார்தி அச்ரேக்கர், மகரந்த் அனஸ்புரே, அபிஜீத் தேஷ்பாண்டே நடிப்பில் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகியிருந்த ‘De Dhakka 2’ திரைப்படம் தற்போது ‘Zee5’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.