அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமான லேக் தாஹோவில் சுமார் 50 அடி அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
வீடுகளின் மேற்கூரைகளில் பனிக் குவிந்து கிடப்பதால், பாரம் தாங்காமல் மேற்கூரை இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் மேற்கூரைகள் இடிந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேக் தாஹோவில் மார்ச் 28ம் தேதி வரை அதிக பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.