ஆட்டோவில் நூலகம் வைத்து கேள்விப்பட்டிருக்கிறோம். பத்திரிக்கைகள் வைத்தும் கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் திருப்பூரைச் சார்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் குடிநீர் வசதியை தனது ஆட்டோவில் செய்து வைத்து பயணிகளுக்கு மகிழ்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தி இருக்கிறார்.
தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. வெயிலின் தாக்கத்தினால் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அரசியல் கட்சிகளும் தன்னார்வலர்களும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் மற்றும் மோர் பந்தல் போன்றவற்றை அமைத்து மக்களின் தாகம் தீர்ப்பார்கள்.
அதேபோன்று திருப்பூரைச் சார்ந்த ஆட்டோ டிரைவர் முருகேசன் தனது ஆட்டோவில் குடிநீர் வசதி அமைத்து வைத்திருக்கிறார். கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தினால் மக்களுக்கு ஏற்படும் குடிநீர் தாகத்தை போக்க தனது வாகனத்திலேயே குடிநீர் வசதி செய்து வைத்திருப்பது பயணிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.