ஆன்மிக கதையில் ரீ-என்ட்ரியாகும் மீனா
90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. எல்லா முன்னணி நடிகர்களின் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். திருமணம், குழந்தை என்றான பிறகும் கூட தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமாக்களில் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். கடந்தாண்டு ரஜினியின் 'அண்ணாத்த' படத்தில் கூட ஒரு சிறிய கதாபாத்திரத்தில் மீனா நடித்தார்.
மேலும், தனது கணவர் இழப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் அவர் இப்போது மீண்டும் நடிக்க கதைகளைக் கேட்டு வருகிறார். இந்நிலையில் பழநி முருகனை மையமாக கொண்ட ஆன்மிக கதை ஒன்றை இயக்குனர் ஒருவர் கூறியுள்ளார். அந்தக் கதை மீனாவை கவர்ந்துள்ளதால் இந்த படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறார். விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம்.